Wednesday, August 10, 2011

நம் சமூகம்..!

மாயத் தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, நாம் வாழும் சமூகத்தின் சூழ்ச்சியை அறியாமல் இவ்வுலகத்தின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு, நாள்தோறும் வெறும் உழைப்பை மட்டும் கொடுத்துவிட்டு, தனக்கு வரவேண்டியவைகளில் பத்தில் ஒரு பங்கிற்கும் விட குறைவாக வாங்கிக்கொண்டு, அரைகுறையாக தனது சராசரி வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் என் சக தோழனுக்கும் தோழிக்கும் ஒரு சின்ன பரிசும் எச்சரிக்கையும்.

"இவ்வுலகம் இன்னும் தழைக்க சிறகுகள் ஒடிந்தும் நீ பெரும்பாடு படுவதை நிறுத்தவில்லை - ஆகையால் உன்னைத் தியாகி என்பேன்

நீ ஈட்டித்தந்த தொகையில் கடலளவு கொடுத்து கடுகளவு எடுத்துக்கொண்டு இன்னும் உழைக்கிறாய் - ஆகையால் உன்னை வள்ளல் என்பேன்

ஆயிரம் இடையூறு வந்தாலும் தன் மக்கள் மகிழ்ந்திட பொன்முறுவல் கொண்டு இன்பம் தந்தாய் -  ஆகையால் உன்னை இனியவன் என்பேன்

தீப்பொறியில் ஆரம்பித்து ஏவுகணை வரை அனைத்தும் உன்னாலேயே படைக்கப்பட்டது - ஆகையால் நீயே இறைவனும் என்பேன் 

இப்படி உலகம் யாவையும் உன்னாலே, உன் உழைப்பாலே..

சிந்தையில் வெவ்வேறாக இருப்பது மனிதனின் இயல்பு - ஆனால்
சிந்தை செய்யாமல் நீ நிற்பதோ வாழ்கையின் விளிம்பு..

நீ உடல் வருத்தி உழைத்து மற்றவர்களுக்கே ஈட்டிக்கொடுக்கும் நிலை நீடிக்குமாயின் - உன்னை முதுகெலும்பில்லாப் புழு என்று கூறப்போகும் அச்சம்

ஆகையால்

விழித்திடு..!

உன் கண்முன் தெரிகிற நம் சமூகம்
நீ சொல்லும் வார்த்தையை திருப்பிச் சொல்லும் பச்சசைக்கிளியல்ல பச்சோந்தி..!"